வேலைவாய்ப்பு

ரூ.39,100/- சம்பளத்தில் ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு!

துணை சட்ட ஆலோசகர் காலியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்களிடமிருந்து ரயில்வே அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விளம்பரத் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – ரயில்வே அமைச்சகம்
பணியின் பெயர் – துணை சட்ட ஆலோசகர்
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Deputy Legal Adviser எனப்படும் துணை சட்ட ஆலோசகர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரர் குறிப்பிடப்பட்ட ஊதியத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரியாக இருக்க வேண்டும்.

தகுதி- அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதி பற்றிய மேலதிக விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம்:

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்து தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு சம்பள நிலை 12 இன் படி ரூ. 15,600 முதல் ரூ.39,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

நேர்காணல்/ திறன் தேர்வு மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே அமைச்சகத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியனவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official Notification – https://drive.google.com/file/d/1i6FdaJl5_cuweMwJwIzmu9l8VLB61qoW/view?usp=sharing


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  Axis Bank வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!
Back to top button
error: