இந்தியா

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்..

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

எனவே விவசாயிகள் மீது தடியடியும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அரசை வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘விவசாயத்துக்கு எதிரான இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப்பெறுமாறு மோடி அரசை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அத்துடன் விவசாயிகள் பேரணியை குறிக்கும் வகையில், காந்தியடிகளின் ‘ஒரு மெல்லிய வழியில் உலகை நீங்கள் உலுக்கலாம்’ என்ற பொன்மொழியையும் குறிப்பிட்டு இருந்தார்.

Back to top button
error: Content is protected !!