ஆரோக்கியம்தமிழ்நாடு

பிரசவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா? இதனை தடுக்க இந்த ஹேர் பேக் போடுங்க!

பொதுவாக பெண்களுக்கு முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சினையாகவே காணப்படும். அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சினை அதிகமாக இருக்கும்.

கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருப்பதால், கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். ஆனால் பிரசவத்திற்கு பின் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால், கூந்தல் உதிர்தல் அதிகம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த பின், குழந்தையை கவனிப்பதிலேயே நேரம் போய்விடும். இதனால் கூந்தலை சரியாக கவனிக்க முடியாமல் போய், கூந்தலும் மெதுவாக குறைய ஆரம்பித்துவிடும்.

எனவே இவற்றை வெகுவிரைவாக சரி செய்வது நல்லது. அந்தவகையில் இந்த பிரச்சினையை சமாளிக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

தேவையானவை

  • வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
  • தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம்.

கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.

முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.

இதையும் படிங்க:  "தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசி தேவை".. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: