விளையாட்டு

பஞ்சாபை பஞ்சர் ஆக்குமா சென்னை? இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

69aad3883e36cf2de6de2bf4ed22d6b5 original

நடப்பு தொடரின் முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோனியின் டக் அவுட் அதைவிட பேரதிர்ச்சியாக இருந்தது.

இன்றைய போட்டியில் தோனி ஃபார்முக்கு திரும்புவது மிக முக்கியமாகும். மீண்டும் அணிக்கு திரும்பிய ரெய்னா, கடந்த போட்டியில் அரைசதம் அடித்தது ஆறுதலாக இருந்தது, டூப்ளிசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, மொயின் அலி இன்றைய போட்டியில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் தீபக் சாஹர் ஏமாற்றம் அளிப்பது கவலையாக இருக்கிறது. வெய்ன் பிராவோ மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக பந்துவீசுகிறார். மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு சாதமாக உள்ளது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது, சென்னை அணி பவுலர்களுக்கு தலைவலியாக இருக்கும் என தெரிகிறது. சென்னை 200 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். இல்லையென்றால், மிகவும் கடினம்தான். அதனால், பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைத்து விளையாடுவது மிக முக்கியமாகும்.

1f2682f923c858a8b10d128878260f16 original

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய தெம்புடன் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அந்த அணியில், கிறிஸ் கெய்ல், கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹீடா செம ஃபார்மில் உள்ளனர். பூரான், தமிழக வீரர் ஷாருக்கான் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் அவர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அதனை நிரூபிக்க அவர்கள் தயாராக இருக்கலாம். ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஜய் ரிச்சர்ட்சன் ஆகியோர் பந்துவீச்சில் நன்றாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்ல வேண்டிய கட்டாயத்திலும், வெற்றியை தொடர வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இருக்கும். இதனால், ஆட்டத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 14 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு சீசனிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புரட்டி போட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று..!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: