மாவட்டம்

புதுக்கோட்டையில் போதை ஊசி, மாத்திரைகளை விற்ற நபர்கள் அதிரடியாக கைது..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, புதுக்கோட்டை டவுன் பகுதியில் போதை ஊசி விற்பனை செய்த பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்கள் ​மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்‍கை எடுக்‍க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  'அரியர்' தேர்வு உண்டா? தேர்தல் முடிவுக்கு பின் தான் முடிவு எடுக்கப்படும்.. உயர்கல்வித்துறை தீர்மானம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: