தமிழ்நாடுமாவட்டம்

BREAKING: ஜல்லிக்கட்டு.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:-

காளையுடன் ஒரு உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டுமே வரவேண்டும்; அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்கு முன்னதாக காளையின் உதவியாளரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று இருந்தால் மட்டுமே காளையின் உரிமையாளரும், உதவியாளரும் அனுமதிக்கப்படுவர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் பதிவை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு உள்ளாகவே பங்கேற்க அனுமதி.

எருது விடும் நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள் 150 உள்ளாகவே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: