தமிழ்நாடுமாவட்டம்

கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு!

கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் உயர்கல்வி துறை சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடைபெறும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் நடைபெறும்.

இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களிலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளும் சுழற்சி முறையில்  நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொறியியல் படிப்புகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  ஆசிரியர், மாணவர்கள் இந்த அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர அனுமதி இல்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: