
மே 3ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மே 3ம் தேதி மொழிப்பாடம் மே 5ம் தேதி ஆங்கிலம் மே 7ம் தேதி கணினி அறிவியல் மே 11ம் தேதி இயற்பியல், எகனாமிக்ஸ் மே 17ம் தேதி கணிதம், விலங்கியியல் மே 19ம் தேதி உயிரியியல், வரலாறு மே 21ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்றும் காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.