
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலுள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், மத்திய அரசை கண்டித்தும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.