பொழுதுபோக்குதமிழ்நாடு
புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு லட்டு ரெசிபி..!

பாசிப்பயறு அதிக அளவில் புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இத்தகைய பாசிப்பருப்பில் இப்போது லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயறு – 200 கிராம்,
வெல்லம் – 150 கிராம்
நெய் – 20 மில்லி,
செய்முறை
வாணலியில் பாசிப்பயறினைப் போட்டு வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பவுடராக பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து தண்ணீரில் வெல்லத்தினை உடைத்துப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி, அதில் பாசிப்பயறு மாவினைப் போட்டு கிளறவும்.
அடுத்து நெய்யைக் கையில் தடவி உருண்டை செய்தால் பாசிப்பயறு லட்டு ரெடி.