இந்தியா

கட்டுமானப் பணிகளுக்குத் தடை!

டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளதால் அம்மாநில அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.

காற்று மாசுபாட்டால் கடந்த 21ம் தேதி வரை கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை என்பதால் மீண்டும் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட காலத்திற்கு தொழிலாளர் வரியாக வசூலிக்கப்படும் நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
Back to top button
error: