தமிழ்நாடு

கிராம சபை கூட்டம் நடத்த தடை – ஊரக வளர்ச்சி இயக்குனர் சுற்றறிக்கை!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்கும் காரணத்தால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பிரவீன் நாயர் தடை விதித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பொது மக்களிடையே அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. ஏற்கனவே மூன்றாம் அலை கொரோனா வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு பணியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் சென்னை, கோவை, ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் முக்கிய வீதிகளில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஜனவரி 26, உழைப்பாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி பிறந்தநாள் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் வழக்கமாக நடைபெறும். இந்தாண்டு கொரோனா பரவல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பிரவீன் நாயர் தடை விதித்துள்ளார். மேலும் இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்குமாறும் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  டெல்டா வகை வைரஸ் பரவல் தீவிரம் – சுகாதாரத்துறை தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: