இந்தியா

புதிய வேளாண் சட்டங்கள்.. மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்?.. பிரியங்கா காந்தி கேள்வி..

புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், Bijnor பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.

அப்போது விவசாயிகளிடையே உரையாற்றிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடியவை என்பதை விவசாயிகள் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானவை என பிரதமர் கூறி வருவதாகவும், விவசாயிகளை விட பிரதமர் மோடிக்கு நன்கு விவசாயம் தெரியுமா எனவும், திருமதி.பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

80 நாட்களாக கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகள் தற்போது கோடை காலத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகளே இந்த சட்டங்கள் வேண்டாமெனக் புறக்கணித்துள்ள நிலையில், இதனை திரும்பபெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

Back to top button
error: Content is protected !!