இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்.. பிரியங்கா காந்தி திட்டவட்டம்..

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் திருமதி பிரியங்கா பங்கேற்று பேசினார். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை, பிரதமர் திரு.மோதியும், பா.ஜ.க, தலைவர்களும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டினார். விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளை தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது என்றும், ஆனால், மத்திய அரசுதான் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது எனவும் குற்றம் திருமதி. பிரியங்கா குற்றம் சாட்டினார். பாகிஸ்தான், சீனா செல்வதற்கு எல்லாம் நேரமிருந்த பிரதமருக்‍கு, பல மாதங்களாக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லாமல் போனதா என்றும் திருமதி பிரியங்கா விமர்சித்தார். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றும் திருமதி பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Back to top button
error: Content is protected !!