இந்தியா

முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மத்திய அரசு வாங்கும் கொரோனா தடுப்பூசி முதியவர்களுக்கு வழங்கவே முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். அதே போல் சுகாதார பணியாளர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தற்போது வரை உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இதற்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் இணைந்து “கோவாக்ஸின்” என்ற தடுப்பூசியினை கண்டுபிடித்துள்ளனர்.

dc Cover o1cgk9e5sustotnvi08bvm5t20 20201117082443.Medi

இதற்கான மனித பரிசோதனைகள் முதல் இரண்டு கட்டங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த பரிசோதனைகளில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இப்படியாக இருக்க இந்த தடுப்பூசிகள் கூடிய விரைவில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு அதனை மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து மத்திய அமைச்சர் தற்போது ஒரு செய்தியினை கூறியுள்ளார்.

Harsh Vardhan 0

ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரோனா தடுப்பூசியான “கோவாக்ஸின்” குறித்து கூறியதாவது, “அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் 40 கோடி முதல் 50 கோடி வரை டோஸ்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 முதல் 4 மாதத்திற்குள் தடுப்பூசிகள் தயாராகிவிடும் என்று தெரிகின்றது. அப்படி தடுப்பூசிகள் தயாரானால் முதியவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!