இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரை!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார்.

இதில் தீவிரவாதம், கோவிட், வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுடன் ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சி குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஜிகிஸ்தானில் நேற்று தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சீனா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஆப்கான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தாலிபன் அரசுக்கும் பாகிஸ்தானுக்கும் அதன் தீவிரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் கவலையளிப்பதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
Back to top button
error: