தமிழ்நாடுஇந்தியா

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாளை சென்னை வருகை தரும் நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோதி நாளை காலை 7.50 மணிக்கு டெல்லியிருந்து புறப்பட்டு 10.35 மணிக்கு சென்னை வருகிறார். சாலை மார்க்கமாக காலை 11.15 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கம் செல்லும் அவர், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்‍கிறார். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில், 3 மணி நேர பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் 1.35 மணிக்கு கேரளா புறப்படுகிறார்.

பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். விழா நடைபெறும் பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கப்படுகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் வரும் வழித்தடங்களில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!