இந்தியா

கேரளாவில் “சுவாமியே சரணம் அய்யப்பா” என பிரசாரத்தை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

தமிழகத்தில் வெற்றி வேல் வீர வேல் என பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கேரளாவில், சுவாமியே சரணம் அய்யப்பா என முழங்கியபடி பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

புதுச்சேரி, தமிழகத்ததை தொடர்ந்து கேரளாவிலும் பிரதமர் திரு. மோடி, பிரச்சாரத்தை தொடர்ந்தார். நேற்று மதுரை மற்றும் கன்னியாகுமரியில் பரப்புரை செய்த பிரதமர், வெற்றி வேல் வீர வேல் என பிரச்சாரத்தை தொடங்கினர்.

இந்நிலையில், கேரளாவில் பரப்புரை செய்த திரு. மோடி, சுவாமியே சரணம் அய்யப்பா என பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பத்தனம்திட்டா, கோன்னி மற்றும் திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த பிரச்சாரக்‍ கூட்டங்களில் உரையாற்றிய அவர், இது கடவுளின் தேசம் என்றும், பகவான் அய்யப்பனின் நாடு என்றும் தெரிவித்தார். கேரளாவில் பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் தயாராகி விட்டதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: