தமிழ்நாடுமாவட்டம்

வேட்டி சட்டை அணிந்து மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்..!

தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.

இதற்கிடையில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி சமீபத்தில் தாராபுரத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று மதுரையில் நடக்கவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதன்படி அதிமுக கூட்டணி தென்மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவுக்கோரி இன்று மதுரை அண்ணா திடலில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் மதுரை வந்த மோடி நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பிரதமரின் வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:  தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஹேர் ஆயில்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: