இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி மற்றும் ஜான்சன் இடையேயான சந்திப்பும் இன்று நடைபெறவுள்ளது.
இதன்போது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இது தவிர, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசுகிறார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh