இந்தியாதமிழ்நாடு

வரும் 14-ம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..

வரும் 14-ம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அட்டவணையின்படி வரும் 14ம் தேதி காலை 7:50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35க்கு மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

அங்கிருந்து 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்யேக ஹெலிபேடுக்கு காலை11 மணிக்கு வரும் பிரதமர் மோடி, 11.15 அளவில் நேரு உள்விளையாட்டு மைதான அரங்கிற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.

12.30 மணி வரை பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 12.55 மணிக்கு மீண்டும் 1 .10 நிமிடங்களுக்கு ஹெலிபேடுக்கு செல்கிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1 .30 மணிக்கு விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி, இந்திய விமானப்படை விமானத்தில் கொச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்குசெல்கிறார்.

Back to top button
error: Content is protected !!