இந்தியா

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணியே காரணம்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்‍கு திரு. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைவதில்லை என்றும், மாறாக, வரியை அதிகப்படுத்தி விலை உயர்த்தப்படுவதாகவும் பொதுமக்‍களிடம் கருத்து நிலவுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 105 டாலராக இருந்தபோது, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய் 41 காசாகவும், டீசல், 56 ரூபாய் 71 காசாகவும் இருந்தது. ஆனால் தற்போது, கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல், 62 டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து, பொதுமக்‍கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்‍கு திரு. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே காரணம் என பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா தனது எரிபொருள் தேவையில், 85 விழுக்‍காடு அளவிற்கு, இறக்‍குமதியை சார்ந்திருப்பதாகவும், எரிபொருள் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்திடும் வகையிலான திட்டங்களை முந்தைய அரசுகள் முறையாக முன்னெடுக்‍கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்திருந்தால், நடுத்தர மக்‍கள் சிரமத்திற்கு ஆளாகும்நிலை ஏற்பட்டிருக்‍காது என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!