உலகம்இந்தியா

இந்தியா-நெதர்லாந்து மெய்நிகர் உச்சி மாநாடு.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

இந்தியா-நெதர்லாந்து இடையே இன்று (ஏப்ரல்.09) உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டியும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உச்சி மாநாட்டின்போது, ​​இருநாட்டுத் தலைவர்களும், உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். மேலும், பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பாவிலே மிகப்பெரிய அளவில் இந்திய வம்சாவளி மக்கள், வாழ்ந்து வரும் இடம் நெதர்லாந்து. நீர் மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், ஸ்மார்ட் நகரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் பரஸ்பர உறவைக் கொண்டுள்ளன.

இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்த மூன்றாவது நாடாக நெதர்லாந்து திகழ்கிறது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட டச்சு நிறுவனங்கள் உள்ளன. இதேபோல, நெதர்லாந்திலும் பல இந்திய வணிகங்கள் நடைபெறுகின்றன. இரண்டு நாடுகளும் நட்புறவைக் கொண்டுள்ளதால், உச்சி மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: