தமிழ்நாடுமாவட்டம்

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..

பனிப்பொழிவாலும், வரத்து குறைவாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தொடர் பனிப் பொழிவு காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், பனிப் பொழிவால் பூக்களின் உற்பத்தி குறைந்ததாலும், வரத்து குறைவு காரணமாகவும், பூக்களின் விலை நான்கு மடங்கு அதிகரித்து, தோவாளை மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ நான்காயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கனகாம்பரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ சந்தையிலும் இன்று, காதலர் தினம் என்பதாலும், நாளை மாசி மாத முதல் முகூர்த்தம் என்பதாலும் பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்து, மூன்றாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

உசிலம்பட்டி பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், மல்லிகை வரத்து குறைந்துள்ளது. இதனால் பூ வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் ரோஜாப்பூக்கள் கிலோ ஆயிரத்து 500ருபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 400 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், முல்லை இரண்டாயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.

Back to top button
error: Content is protected !!