உலகம்

இந்தியாவிற்கு தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்க சீனா தயார்.. அதிபர் ஜீ ஜின்பிங் தகவல்..!

கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராட இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளதாக அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வுஹான் நகரில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு இறுதியில் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் முதல் 2-ம் அலை தீவிரமாக வீசி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தாக்‍கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராட இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளதாக அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் திரு. மோடிக்‍கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வைரஸ் தொற்று பரவலால் இந்தியாவில் ஏற்பட்டு நிலை கவலை அளிப்பதாக கூறியுள்ளார். இந்த சூழலில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்க சீனா தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இந்த பெருந்தொற்றை இந்திய மக்‍கள் வெற்றி கொள்வார்கள் என்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றால் பெரும் நெருக்‍கடிக்‍கு ஆளாகியுள்ள நிலையில், வைரஸ் பரவல் குறித்து சீனாவிலிருந்து எந்த தகவலும் தற்போது வெளிவருவதில்லை என்பது குறிப்பிடத்தக்‍கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: