இந்தியா

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புத்தாண்டு வாழ்த்து..!

உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்‍கொள்வதாக குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி, வளத்தை கொண்டுவரட்டும் என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:  தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: