உலகம்

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பிரசாரம்! முகநூல் நிறுவனம் மீது அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களின் மூலம் முகநூல் சமூக வலைதளம் மக்களை கொன்று வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறப்பவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே அதிகம் என கூறப்படுகிறது. தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கொண்டவர்களும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களும் இடும் பதிவுகளால் ஊசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

தடுப்பூசிக்கு எதிரான பதிவுகளை முகநூல் நிறுவனம் நீக்க முன் வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ள பைடன், இத்தகைய போக்கு மக்களை மரணத்திற்கு அழைத்துச் செல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பைடனின் குற்றச்சாட்டை மறுத்துள்ள முகநூல் நிறுவனம், உலக முழுவதும் 200 கோடி மக்கள், கொரோனா குறித்த உண்மை தகவல்களை முகநூலில் கண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 கோடி பேர் தடுப்பூசி குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: