ஆன்மீகம்

வளர்ச்சியை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த எண்கணிதம்!

நமக்கு அமையும் பெயர் எவ்வளவு முக்கியமானது என்று, நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். பிறந்த பொழுது ஒரு குழந்தைக்கு கிடைக்கும் பெயரே, இறுதி வரைக்குமான முதல் அடையாளமாகும். அதனால், எவ்வளவு கவனத்தோடு அந்த பெயரை சக்தி மிக்கதாக அமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், கட்டாயமும் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நாம் அறிந்திட வேண்டும்.

வெற்றி

தேதி + தேதி கூட்டு எண் மற்றும் பிறப்பு நேரம் கிரக நிலைகளுக்கு ஏற்ற பொருத்தமான எண்ணியல் பெயர் எண் என்பது அந்த மனித வாழ்விற்கான வெற்றி தரும் கேடயமாகும்.

இன்றைய நவீன யுகத்தில் விஞ்ஞானம் கூட நம்புவது எண்களைத்தான்.

ஆம், ஒவ்வொரு மனிதருக்கும் அடையாளமாக வழங்கப்படும் சான்றிதழ்களில் கூட அவரவர்களுக்குரிய எண்களாகத்தான் வழங்கப்படுகிறது.

எண்கள்

எண்கள் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அதனால் தான், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் எண்களைப் பயன்படுத்த துவங்கிவிட்டனர்! இந்த உலகத்திற்கு பூஜ்யத்தை கண்டுபிடித்துக் கொடுத்தவரும் நம் முன்னோரே.

தனி மனித வாழ்வில் அவ்வப்போது நிகழும் கிரக மாற்றங்கள் மேலும் அவர் பிறந்த தேதியில், நேரத்தில் நிகழ்ந்துள்ள கிரக இருப்புகள் சில நேரங்களில் நன்மைகளையும், சில நேரங்களில் தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்யும்.

ஆனால், எண்களை உபயோகப்படுத்தி நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ளவும், தீமைகளைத் தடுக்கவும் முடியும் என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தனர்.

பிரபஞ்ச சப்தம்

அதனால் தான் மந்திர சக்தி மிக்க பிரபஞ்ச சப்தங்களுக்கு எண் அளவுகளை கண்டுபிடித்து அதனை முறையாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய நன்மைகளை அதிகப்படுத்திக் கொண்டனர்.

குபேரனுடைய ஆற்றலைப் பெற்ற 33-ஆம் எண் கொண்டு நிறைய விஷயங்களை ஓர் மனித வாழ்வில் சாதித்துக் கொள்ள முடியும்.

திருப்பதி

அகில உலகத்தில் இருந்தும் தன்வசம் ஈர்த்துக் கொள்ளக் கூடிய காந்தவிசை பெற்ற ஒரு புனித இடம் சுக்கிர ஆதிக்க ஸ்தலமான திருமலை திருப்பதி!

அத்தகைய மாபெரும் சக்தி பெற்ற அந்த ஸ்தலத்திற்கு சென்று வரும் பொழுது வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்வதை இன்றுவரையும் பலர் கண்கூடாக உணர்ந்து வருகின்றனர்.

எண் 33 கூட சுக்கிரனுக்கான குபேர சம்பத்து உடைய ஒரு அற்புத எண்ணாகும்.

இந்த எண் பொருந்தும்படி மிகத் தகுந்த முறையில் பல ஆய்வுகளுக்கு பிறகு உங்களுடைய பெயராக அமைத்து தரும்பொழுது உங்கள் வாழ்வில் ஓர் மாபெரும் வளர்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

உங்களுக்கும், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் சக்திமிக்க எண்கணித பெயர் அமைந்து வாழ்வில் வெற்றி பெற வாய்ப்பு கிடைத்து விட்டது.

இதையும் படிங்க:  திருமணத்தில் அட்சதை அரிசியில் போடுவது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: