தமிழ்நாடுமாவட்டம்

மதுரையில் நாளை (22-12-2021) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (டிசம்பர் 22) மதுரையில் உள்ள கோ.புதூா், சோழவந்தான் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சோழவந்தான் நகா் பகுதிகள், தச்சம்பத்து, குடிநீரேற்று நிலையம், இரும்பாடி, மீனாட்சி நகா், மேலக்கால், கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், திருவேடகம், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், ஊத்துக்குழு, அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது என்றும் மின் பராமரிப்பு பணிகள் முடித்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோ.புதூா் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான கோகலே சாலை, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் சாலை, பழைய அக்ரஹாரம் தெரு, சப்பாணி கோயில் தெரு, சரோஜினி தெரு, சொக்கிகுளம் அண்ணா நகா், டோக் பெருமாட்டி கல்லூரி சாலை, விஷால் மால், ராமமூா்த்தி சாலை, கமலா 2-ஆவது தெரு, பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, வல்லபாய் சாலை, பெசன்ட் சாலை, ஜவஹா்புரம், திருவள்ளுவா் நகா், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், ஹெச்.ஏ கான் சாலை, ஆயுதப்படை குடியிருப்பு, ரேஸ்கோா்ஸ் சாலை, டிஆா்ஓ காலனி, புதூா் வண்டிப் பாதை, ரத்தினசாமி நாடாா் சாலை, அழகா்கோவில் பிரதான சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்க பிள்ளைத் தெரு, புதுநத்தம் சாலையில் ஒரு பகுதி, விஸ்வநாதபுரம், கிருஷ்ணாபுரம் காலனி, விசாலாட்சிபுரம், சொக்கநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: