தமிழ்நாடு

செப்.18ம் தேதி சூலூர், உக்கடம் பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் செப்டம்பர் 18ம் தேதியான நாளை மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்காக மின்வாரியம் முன்னதாக திட்டமிட்டு மின்தடை செய்ய இருக்கும் பகுதிகளின் பட்டியலை அறிவித்து விடுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் தொழிலகங்கள் முன்னதாக தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள முடியும். நாளை (18.9.2021) கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதனால், சூலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சூலூர், பி.எஸ் நகர், டி.எம். நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம் பாளையம், எம்.ஜி. புதூர், ராவுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார். மேலும், சரவணம்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டபாளையம், கவுண்டர்மில்ஸ், சுப்பிரமணிபாளையம், கே.ஜி.புதூர், மணியகாரம்பாளையம் உள்ளிட பகுதிகள்.

மேலும், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெய பிரகாஷ்நகர், கணபதிநகர், உடையாம்பாளையம், வெள்ளகிணறு ஹவுசிங் யூனிட், விநாயகபுரம் வடபகுதி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். உக்கடம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுண்ஹால் பகுதி. தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர், ஸ்டேட் பாங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் – கலந்தாய்வு தேதி வெளியீடு!!
Back to top button
error: