தமிழ்நாடு

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை!!

தமிழக செப்டம்பர் 20 ம் தேதி ஆசிரியர் பயிற்றுனருக்கு நடைபெறவிருந்த பணிமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி தமிழகத்திலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியா் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றள்ளது.

தமிழகத்தில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணிமாறுதல், பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களுக்கு செப்டம்பர் 15 ம் தேதி பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அடுத்த கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 20 தேதியான இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. கலந்தாய்வின் போது ஆசிரியர்கள் பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் அரசாணையில் தெரிவிப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் இன்று நடைபெறவிருந்த ஆசிரியா் பயிற்றுநருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது. பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தனியார் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்க அனுமதி – முக்கிய அறிவிப்பு!!
Back to top button
error: