இந்தியா

அதிதீவிரமாக பரவும் கொரோனா.. சிவில் சர்வீஸ் நேர்காணல் தேர்வு ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் , மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் டெல்லி மாநிலத்தில் 6 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் மோசமாக உள்ளதால் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்சி 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டன மேலும், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  22 வயது மதிக்கத்தக்க நபருடன் வீட்டை விட்டு ஓடி வந்த 18 வயது பெண்! விமானத்தில் அனுப்பி வைத்த போலீசார்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: