பொழுதுபோக்குதமிழ்நாடு

பிரசவித்த பெண்களுக்கான சுவரொட்டி வறுவல்..!

பிரசவித்த பெண்களுக்கு சுவரொட்டியில் வறுவல் செய்து கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவர்.

தேவையான பொருட்கள்

சுவரொட்டி – கால் கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 2
பட்டை – 1 துண்டு
கிராம்பு- 3
இஞ்சி – 1
பூண்டு – 1
மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ஸ்பூன்
தனியா தூள் – ½ ஸ்பூன்
சீரகத் தூள் – ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

1. சுவரொட்டியைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை. மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.

2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

3. அடுத்து மிளகாய்த் தூள், மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள் சேர்த்து வதக்கி ஈரல் போட்டு வதக்கவும்.

4. இறுதியாக கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சுவரொட்டி வறுவல் ரெடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: