சினிமாஇந்தியாபொழுதுபோக்கு

500 கோடி கேட்டு யூடியூப் சேனலுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்..

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து பிரபலமான சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜுன் மாதம் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ பாலிவுட்டில் அதிகளவு போதை பொருள் பயன்பாடு உள்ளது தொிய வந்துள்ளது. இந்நிலையில் பீகாரை சேர்ந்த ரஷீத் சித்திக் என்பவர் நடத்தி வரும் எப்எப் நியூஸ் என்ற யூடியூப் சேனலில் இந்த தற்கொலை தொடர்பாக செய்திகள் தொடர்ந்து வௌியிட்டதால், பார்வையாளர்கள் எண்ணிக்கை கடகடவென உயர்ந்தது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், அவரது மகன் ஆதித்யா தாக்கரேவுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த சேனலில் செய்தி வௌியிடப்பட்டது.

அதற்காக ரஷீத் சித்திக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மேலும் வௌியிட்டுள்ள செய்தியில் சுசாந்த் சிங் ராஜ்புத் காதலி ரியா கனடாவிற்கு தப்பி செல்ல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவியதாகவும், அவர் தோனி படத்தில் நடித்ததை அக்‌ஷய் குமார் விரும்பவில்லை என்றும் தொிவித்திருந்தார்.

இதன் காரணமாக தன்னை பற்றி அவதுாறாக செய்தி வௌியிட்டமைக்காக அக்‌ஷய் குமார், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரஷீத் சித்திக் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!