இந்தியா

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 – முதல்வர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த பணம் குடும்ப தலைவிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் போகியில் ஆரம்பித்து காணும் பொங்கல் என மொத்தம் 3 நாட்கள் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். விவசாயிகளையும், விவசாய தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு தைப்பொங்கல் ஜனவரி 14 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்களை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தை போல புதுச்சேரியிலும்  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இதையடுத்து மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆண்டுதோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக சேலை, வேட்டி மற்றும் துண்டு வழங்கப்பட்டு வழங்கப்படும். இந்த ஆண்டு இந்த துணிகளை கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் துணிகளுக்கு பதிலாக பணத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைகளுக்கு வழங்கும் இலவச துணிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். பழங்குடியினர் இன மக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,27,789 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும். இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வீதம் நேரடி பணப் பரிமாற்றம் மூலம் 13.01.2022 அன்று குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: