தமிழ்நாடுமாவட்டம்

வருகிற 31 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்..

நடப்பு ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கொரோனா தடுப்பூசித் திட்டம் காரணமாக போலியோ முகாம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 31ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, கொரோனா தொற்று நெறிமுறைகள் மற்றும் வழிக்காட்டுதலை பின்பற்றி போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும். மாஸ்க் அணிந்து, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும். கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். சொட்டு மருந்து கொடுக்கும் ஒவ்வொரு குழந்தையுடன் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பெரியவர்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் முகாம்களில் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!