தமிழ்நாடுமாவட்டம்

ஹோட்டலில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தாக்கிய போலீஸ் பணியிட மாற்றம்..!

கோவையில் இரவு 10 மணிக்கு மேல் உணவகத்தை திறந்து வைத்ததால் ஊழியர்களை தாக்கிய சம்பவத்தில் உதவி ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்கள் சிலர் நேற்றிரவு 10 மணியளவில் இந்த உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர். கடையை பாதி மூடிய நிலையில், அவர்கள் உணவு அருந்திக்‍ கொண்டிருந்தனர்.

அப்போது காந்திபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் அங்கு ரோந்து வந்துள்ளார். கடை பாதி திறந்திருப்பதை பார்த்த அவர், உள்ளே நுழைந்து ஊழியர்களை லத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் உணவக ஊழியர்கள் காயமடைந்தனர். மேலும், அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் நெற்றியில் பலமாக காயம் ஏற்பட்டது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், வியாபாரிகளை போலீஸ் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காந்திபுரம் பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸின் இந்த அராஜக செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்தன. இதனைத்தொடர்ந்து, புகாருக்கு ஆளான உதவி ஆய்வாளர் முத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: