இந்தியா

இரவு ஊரடங்கை மீறியோர் மீது போலீசார் தடியடி..!

கர்நாடகாவில் இரவு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. கர்நாடகாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 6,955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு நகர்ப்புற பகுதிகளில் மட்டும் ஒரேநாளில் 4384 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு, கல்புர்கி ஆகிய பகுதிகளில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நேற்று இரவு ஊரடங்கை மீறி சாலையில் சென்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். கல்புர்கி நகரில் இரவு ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

எக்காரணத்தை முன்னிட்டும் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மீற வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:  இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: