தமிழ்நாடுமாவட்டம்

வாயில் வைத்த பரோட்டாவோடு உயிரிழந்த நபர்! போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்ட நபர் திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் வேலைக்காக திருக்கோவிலூர் சென்றுள்ளார். மாலை பேருந்து நிலைய வளாகத்தில் அமர்ந்து வாங்கிய பொட்டலத்தை பிரித்து பரோட்டாடை சாப்பிடும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாயில் வைத்த பரோட்டாவோடு சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு!
Back to top button
error: