
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாயை தாண்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் வாகன பயன்பாடு குறைந்திருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையில், மாற்றமில்லாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வுகளுக்கப்பிறகு, வாகன பயன்பாடு அதிகரித்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 27 காசு அதிகரிக்கப்பட்டு 92 ரூபாய் 25 காசாகவும், டீசல், 32 காசு உயர்த்தப்பட்டு 85 ரூபாய் 63 காசாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.