தமிழ்நாடு

திருப்பூரில் அனைத்து நாட்களும் கடைகள் இயங்க அனுமதி – வியாபாரிகள் கோரிக்கை!!

திருப்பூர் உடுமலையில் வியாபாரிகளின் நலன் கருதி காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரி வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த சில தினங்களாக மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் தான் தொற்று அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் விசேஷ தினங்களை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகங்கள் பக்தர்கள் வருகைக்கு தடை விதித்தது.

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தினசரி பரிசோதனைகள் அதிகபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் வெகு நாட்களுக்கு பின்பு தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியதால் தடுப்பு பணியாக மக்கள் அதிகம் கூடும் உடுமலை பகுதியில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் அப்பகுதியில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் காய்கறி, இறைச்சி, மருந்து போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி தினமான ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாட்களில் வியாபாரம் தடைபடுவாதக கவலை தெரிவித்தனர். மேலும் இதனால் பொதுமக்களும் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வியாபாரிகளின் நலன் கருதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பள்ளி செல்லா குழந்தைகள் கவனத்திற்கு – கணக்கெடுப்பு செப்.20 வரை நீட்டிப்பு!!
Back to top button
error: