தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

திருப்பூர் மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி காலை 6 மணி மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் வரும் 23ம் தேதி வரை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த 2 வாரங்களாக மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் தடுப்பு பணிகள் துரித்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்த மாதம் ஆடி விசேஷ வழிபாட்டை முன்னிட்டு கோயிகளில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். அதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்பதால் பக்தர்க்கள் வருகைக்கு மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்து வருகிறது.

தொற்றுள்ள அதிகம் உள்ள மாவட்டங்களில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கடைகள் திறக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி கடைகள் திறப்பு நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் படி காலை 6 மணி மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் வரும் 23ம் தேதி வரை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  ‘அடுத்த 10 நாட்கள் முக்கியமானது’ - சுகாதாரத்துறைச் செயலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: