இந்தியா

கோவா மாநிலத்தில் ஆகஸ்ட் 30 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு, திரையரங்குகளுக்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!

கோவா மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே சில கூடுதல் செயல்பாடுகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் கோவா மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் 9 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அவ்வப்போது இருந்த கொரோனா நிலவரத்தை கவனத்தில் கொண்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 22) முதல் முடிவடைந்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளானது ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆடிட்டோரியங்கள், சமூக அரங்குகள் மற்றும் படகு வீடுகள், ஸ்பாக்கள், மசாஜ் பார்லர்கள் போன்றவை செயல்படுவதற்கான தடைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கோவாவுக்கு வரும் மக்கள் அதிகபட்சமாக 72 மணி நேரத்திற்குள் RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் முடிவு பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக இந்த பொது முடக்கத்தின் போது சில தளர்வுகளுக்கு அரசு அனுமதித்துள்ளது. அதன் கீழ்,

 • கேசினோக்கள், ஆடிட்டோரியங்கள், சமூக அரங்குகள், நீர் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டிருக்கும்.
 • ஆற்றில் பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை.
 • ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
 • 50% திறன் கொண்ட சினிமா அரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
 • பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
 • இருப்பினும், பள்ளித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை அரசின் ஒப்புதலுடன் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
 • சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், திருமணச் செயல்பாடுகள் உள்ளிட்ட மற்ற கூட்டங்களில் 50% பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
 • பார்கள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 50% திறனில் செயல்படலாம்.
 • உட்புற ஜிம்கள் 50% திறனுடன் திறக்கப்படலாம்.
 • விளையாட்டு வளாகங்களில் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி இல்லை.
 • தவிர மாநிலங்களுக்கு இடையேயான இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட கீழ்கண்ட நபர்கள் கோவாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

 • அதன் கீழ் தொழிலாளர்கள், கட்டுமானம் போன்ற வேலைக்காக கோவாவிற்குள் நுழையும் நபர்கள்.
 • வணிகம் மற்றும் வேலைவாய்ப்புக்காக வரும் நபர்கள்.
 • கோவாவில் வசிப்பவர்கள், தங்கள் வேலைகள், மருத்துவ காரணங்களுக்காக கோவாவிற்கு வெளியே பயணம் செய்து சில நாட்களுக்குப் பிறகு மாநிலத்திற்குத் திரும்பியவர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை.
 • அதே நேரத்தில் மருத்துவ அவசரநிலைகளுக்காக கோவாவில் நுழையும் நபர்களுக்கு சான்றிதழ் கட்டாயம் இல்லை.
 • தவிர சரக்கு வாகனத்தில் வரும் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னர் நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க:  கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம்; கர்நாடக முதல்வர் தகவல்!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: