தமிழ்நாடு

பேருந்து பயணிகளிடம் பாலியல் செயலில் ஈடுபடும் ஊழியர்கள் நிரந்தரபணிநீக்கம்!

பேருந்து பயணிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்யும் ஊழியர்கள் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிக்கு ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு பெரும் தலைகுனிவையும் களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வாக பதிவாகியுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து கோனூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்தில், இரவில் தனியாக சென்ற கல்லூரி மாணவிக்கு கண்டக்டர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு டிரைவர் அன்புச்செல்வனும் உடந்தையாக இருந்துள்ளார். புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, டிரைவர் மற்றும் கண்டக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: