வேலைவாய்ப்பு

ரூ.10,000/- ஊதியம் பெரியார் பல்கலைக்கழக வேலை!!

பெரியார் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் PROJECT FELLOW பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் இறுதி நாளான 24.12.2021க்குள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடைய கேட்டு கொள்கிறோம்

காலிப்பணியிடங்கள்:

பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் PROJECT FELLOW பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இந்த பணிக்கு அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.Sc. in Biochemistry/ Life Science பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

முன் அனுபவம்:

இப்பணிக்கு Handling rat/ mice, Biochemical analysis of blood/ plasma/ serum ல் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் நல்ல மொழித்திறன் உடையவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த PROJECT FELLOW பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

ஊதியம்:

இப்பணிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.10,000/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படவுள்ளது.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வாயிலாக அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறது. அல்லது விண்ணப்பதாரரின் bio-data வை கீழ் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் தெரிவித்துக்கொள்கிறோம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr.T.Palvannan
Department of Biochernistry,
Periyar University,
Periyar Palkalai Nagar,
Salem – 636 011, Tamil Nadu

Official PDF Notification – https://www.periyaruniversity.ac.in/Documents/2021/Advt/biochemistry.pdf

Official Site -https://www.periyaruniversity.ac.in/

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: