தமிழ்நாடு

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்!!

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யபட்டு 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி சமூக வலைதளமான ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னைக்கு வரும் போது கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு காரணமாக 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் 30 வருடங்களுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல அரசியல் பிரமுகர்கள், கட்சியினை சேர்ந்தவர்கள் அவர்களை விடுதலை செய்யக் கோரி எதிர்ப்பு குரல் எழுப்பி வந்தனர். அதிலும் குறிப்பாக பேரறிவாளன் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வந்தது.

EnP5D75VEAAOdTq

தற்போது அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது. இதில் பிரபல சினிமாத்துறை நடிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் கூட தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கருத்து:

தமிழ் நடிகர் ஆர்யா கூறுகையில், “நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்…சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம்மாளும்தான்”

நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், “தீர்ப்புக்குப் பின்னும் மறு விசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்கு மூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

aa Cover j85md40csp90dd0a6lhfhbp2r7 20170501134442.Medi

நடிகர் விஜய் சேதுபதி கூறிருப்பதாவது, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து பேரறிவாளனை விரைவாக விடுதலை செய்ய வேண்டும்” இப்படியாக கூறியுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!