தொழில்நுட்பம்

இந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து! மக்களே உஷாரா இருங்க..

பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு இந்த வகை ஏடிஎம் கார்டைப் பயன்படுத்த முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது, மேக்னடிக் ஸ்டிரிப் அடங்கி கார்டுகளுக்குப் பதிலாக பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய சிறிய சிப் பொருத்தப்பட்ட ஈஎம்வி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்குபடி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

credit card2

இதுகுறித்த உத்தரவை ரிசர்வ் வங்கி வழங்கியிருந்தாலும் சில வங்கிகள் இதை இன்னும் கடுமையாகக் கடைபிடிக்கவில்லை. இன்னும் பலரிடம் மேக்னடிக் ஸ்டிரிப் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஈஎம்வி சிப் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஈஎம்வி ஏடிஎம் மெஷின்களில் கார்டைச் செலுத்திய பிறகு அந்த கார்டில் உள்ள சிப் மூலமாக விவரங்கள் பார்க்கப்பட்டு பணம் மெஷினிலிருந்து வெளி வருகிறது. டிரான்சாக்சன் முடிவதற்கு முன்னர் பணத்தை எடுக்க முடியாது.

Magnetic vs EMV

ஆனால், ஈஎம்வி அல்லாத ஏடிஎம்களில் டிரான்சாக்சன் முடிவதற்கு முன்பே பணம் வெளிவருகிறது. இதனால் நிதி மோசடி நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே ஈஎம்வி கார்டு பரிவர்த்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தரப்பிலிருந்து வரும் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள் குறித்தும் வாடிக்கையாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க் போன்ற வங்கிகள் குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வரும் போலியான தகவல்களை நம்பி எந்த லிங்க்கையும் கிளிக் செய்து மோசடிக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளன.

Back to top button
error: Content is protected !!