தொழில்நுட்பம்இந்தியாதமிழ்நாடு

மக்களே உஷார்.. பிப்ரவரி 1 முதல் இந்த ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது..

பிப்ரவரி 1 முதல் EMV அல்லாத ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) புது நடவடிக்கையை கொண்டு வந்துள்ளது.

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும் விதிமுறையை பஞ்சாப் நேஷனல் வங்கி மாற்றி அமைத்துள்ளது. ஏடிஎம் கார்டுகளை காந்ததுண்டு மூலம் படிக்கும் இயந்திரங்களில் இருந்து இனி பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது. அதாவது EMV எனப்படும் இயந்திரங்கள், அட்டைகளை சில நிமிடங்கள் உள்ளே வைத்த பின்னரே பணத்தை எடுக்க முடியும். இதன்படி, EMV இயந்திரங்களில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், PNBone பயன்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனவும் பஞ்சாப் நேஷனல் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!