உலகம்

ஆப்கானில் பஞ்சம் பணத்திற்காக நடுரோட்டில் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விற்கும் மக்கள்!!

தாலிபான்களுக்கு அஞ்சி அப்பகுதியில் வங்கிகள் மூடப்பட்டு இருப்பதால் மக்கள் தங்களது சேமித்த பணத்தை எடுக்க முடியவில்லை. காபூலில் உள்ள பெரிய நிறுவனங்களும் வெளியேறுவதால் மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.

இதனால் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை வீதிக்கு கொண்டு வந்து விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காபூலில் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வரும் ஃபிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பல உயர்ந்த பொருட்களை வீதிக்கு கொண்டு வந்து மலிவான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

குழந்தைகள் பசியில் தவிக்காமல் கையில் கிடைத்ததை வைத்து சாப்பாடு வழங்கலாம் என்ற எண்ணத்தில் இதனை மக்கள் கையில் எடுத்துள்ளனர். ஆப்கான் மக்கள் தங்களது சொத்துக்களை விற்று தாலிபான் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதையடுத்து மக்கள் கொத்து கொத்தாக ஆப்கானில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உலகளவில் 26.51 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!
Back to top button
error: