வடமாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..

வடமாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், டெல்லி, பஞ்சாப்பில் நேற்று இரவு அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
தலைநகர் டெல்லி, அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஜம்முவில் நேற்றிரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம் உத்தரகாண்ட் மற்றும் நொய்டா பகுதியிலும் எதிரொலித்தது.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு 10.34 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல், மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப்பில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.